தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான 2,327 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் சென்னையில் தொடங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மையத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்கும் நிலையில் வாரம் தோறும் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்பில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பித்ததற்கான நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை நகல் போன்றவற்றை பயிற்சி நடைபெறும் இடத்திற்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை [email protected] என்ற ஆன்லைன் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
