தென் அமெரிக்கா பகுதிகளில் ஜாகுவார் என்ற சிறுத்தை வகைகள் காணப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் குளியல் தொட்டியில் வைத்து சிறுத்தையை அசால்டாக குளிப்பாட்டும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ விலங்குகள் சரணாலயத்தில் எடுக்கப்பட்டதா அல்லது ஒரு சிறுத்தை குட்டியை தத்தெடுத்து அந்தப் பெண் வளர்த்து வரும் நிலையில் அதனை குளிப்பாட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.
அவர் பூனைக்குட்டியை குளிப்பாட்டுவது போன்று அந்த சிறுத்தையை குளிப்பாட்டுகிறார். ஒரு கையால் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி மறு கையால் சிறுத்தையை தேய்த்து குளிப்பாட்டுகிறார். அந்த சிறுத்தையும் சீறாமல் அப்படியே அமைதியாக இருக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில்பல லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் சரிவர தெரியவில்லை.
View this post on Instagram
