
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று இன்று காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசின் காலை உணவு திட்டம் குறித்து பேசி உள்ளார்.
அதாவது புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் காலை உணவு திட்டம் இடம்பெற்ற நிலையில் அதன் பெயரை மாற்றி திமுக மாநில கல்வி கொள்கை என்ற பெயரில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்று கூறினார். அதன் பிறகு காலை உணவு திட்டத்தில் வெறும் சாப்பாடு, இட்லி மற்றும் தோசை போன்ற உணவுகளை மட்டும் வழங்காதீர்கள். அதோடு சேர்த்து முட்டை மற்றும் சிறுதானியங்கள் போன்ற சத்தான உணவு வகைகளையும் காலை உணவு திட்டத்தில் வழங்க வேண்டும். மேலும் இதனை தமிழக அரசு உறுதி செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.