இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடி மக்களுக்கும் ரேஷன் கார்டு என்பது முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில் மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்வோர் ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம் செய்ய ஆன்லைனில் கடைபிடிக்கப்படும் முறை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
முதலில் www.pdsportal.nic.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PDS போர்ட்டலில் நுழைய வேண்டும். இந்த இணையதளத்தில் உள்ள முகப்பு பக்கத்தின் மேல் இடது பக்கத்தில் உள்ள மாநில அரசு இணையதளங்கள் என்ற பகுதியை அழுத்த வேண்டும்.
இதனைத் தொடர்ந்து திறக்கப்படும் பக்கத்தில் எந்த மாநிலம் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்தால் சம்பந்தப்பட்ட மாநில இணைய தளம் செல்லும்.
அப்போது ரேஷன் கார்டு முகவரி மாற்ற படிவம் அல்லது ரேஷன் கார்டு படிவத்தில் மாற்றம் தொடர்பான பகுதியை தேர்வு செய்து யூசர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்க வேண்டும்.
அதை பயன்படுத்தி உள்ளே சென்று தேவையான விவரங்களை நிரப்பி சமர்ப்பித்தால் அது சரிபார்க்கப்பட்டு முகவரி மாற்றப்படும்.
