சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டள்ளார். மேலும் சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.  ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட மூன்று நாள்களில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலையை தடுக்க தவறியதால் இடமாறுதலா?  என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அதேபோல, சென்னையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாகக் கூறி, முன்பே பணியிட மாறுதலுக்குள்ளாக வேண்டியிருந்ததாகவும், ஆனால் துணை ஆணையர் அரவிந்த் பணியிடம் மாற்றப்பட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.