
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சியினர் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் கள்ளக்குறிச்சிக்கு சென்ற மநீம தலைவரும் நடிகருமான கமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்கு செய்தியார்களை சந்தித்து பேசிய அவர், “வள்ளுவர் காலத்தில் இருந்து மது என்பது இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வருவதற்கு முயற்சியை நாம் எடுக்க வேண்டும். சாலையில் விபத்து ஏற்படுகிறது என்பதற்காக நாம் போக்குவரத்தை நிறுத்த முடியாது. அதுபோலவே டாஸ்மாக் கடைகள் என்பது இருக்கின்றன. எனவே, குடிக்காதீர்கள் என சொல்வதைவிட மிதமாக குடியுங்கள், உங்கள் உயிர் தான் உங்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளார்.