
ஆந்திராவில் பாபட்லா மாவட்டத்தில் எப்ருபாலம் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு சென்றுள்ளார். அவர் காலை 5.30 மணிக்கு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு பகுதிகளில் அவரை தேடினர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் உள்ள முட்புதரில் நிர்வாண நிலையில் அந்தப் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் பெண்ணின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு முதல் மந்திரி 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.