
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் அருகே கிராமத்தில் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணை இரண்டு பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவரை கொலை செய்ய முயன்ற நிலையில் அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் அரை நிர்வாணமாக 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடிள்ளார். தனக்கு நிகழ்ந்த இந்த கொடுமையை கிராம மக்களிடம் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் தப்பி ஓடிய குற்றவாளிகளை சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பிறகு அவர்களை போலீசில் ஒப்படைத்த நிலையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.