சென்னை மாங்காடு அருகே பொழுமனிவாக்கம் சார்லஸ் நகர் அமைந்துள்ளது. இங்க ராகேஷ்-எலிசபெத் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 11 வயதில் துஜேஷ் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் துஜேஸ் நேற்று மாலை வீட்டின் அருகே  விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் கார்த்திக்க என்பவர் தன்னுடைய நாயுடன் நடை பயிற்சிக்கு சென்றார்‌. அவர் வீட்டில் ராட்வீலர் நாயை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அவருடைய நாய் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறியது. இதில் தொடையில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாங்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கார்த்திகை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே சென்னையில் ராட்வீலர் நாய் கடித்ததில் பூங்காவில் ஒரு சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து அது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.