
12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
மேலும் செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிய வேண்டும். முறையான ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.