நாடு முழுவதும் நேற்றுயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் ஏராளமான மாணவர்கள் எழுதினார்கள். இருப்பினும், கூகுள் மேப்பால் சுமார் 60 விண்ணப்பதாரர்கள் தேர்வைத் தவறவிட்டுள்ளார். இதனால் அந்த மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்கள்.

அதாவது, மகாராஷ்டிராவில் உள்ள சமர்த் நகருக்கு பதிலாக, 14 கி.மீ. தள்ளியுள்ள வாட்கான் கோல்ஹாட் இடத்தை காட்டியதால், அவர்களால் சரியான நேரத்திற்கு தேர்வு மையம் செல்ல முடியவில்லை. தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த பல மாணவர்கள் கதறி அழுதனர்.