இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏழைகளின் ரதம் என்று அழைக்கப்படும் ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள்.

இதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது 45 காசுகள் கொடுத்தால் இன்சூரன்ஸ் பாலிசி சேர்க்கப்பட்டு விடும். அதன் பிறகு ரயில் விபத்து நேர்ந்து பயணிகள் இறக்க நேரிட்டால் பத்து லட்சம் ரூபாயும், காயமடைந்தால் காயத்தை நிலைக்கு ஏற்ப நிவாரணமும் வழங்கப்படும். முன்னதாக அந்த தொகையை பெற நாமினியை இணைத்து இருக்க வேண்டும்.