தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் தற்போது துபாய் சென்றுள்ள நிலையில் அங்கு இருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது பதப்படுத்தப்பட்ட கழிவுகளை ஊருக்கு வெளியே கொண்டு மண்ணை போட்டு மூடியுள்ளனர். இந்த குப்பைமேட்டின் புகைப்படத்தை அவர் பகிர்ந்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், நான் துபாயில் இருக்கிறேன். பின்னால் தெரிவது மலை கிடையாது. பதப்படுத்தப்பட்ட குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணை போட்டு மூடி வைத்துள்ளனர். இதில் துர்நாற்றம், சுகாதாரக் கேடு, சுற்றுச்சூழல் மாசு கிடையாது. இது மக்கிய  பிறகு தாவர உரமாக மாறும் சாத்தியம் இருக்கும். மேலும் வெளிநாடு செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டத்தை உள்நாட்டில் செயல்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.