ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம் தேதி தொடங்கிய நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் 16வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42 ரன்கள் வரை எடுத்தார். இந்நிலையில் ஐசிசி போட்டி நடைபெறும் போது ஒவ்வொரு தொடரிலும் சிறப்பான முறையில் விளையாடும் வீரரை பிசிசிஐ கௌரவிப்பது வழக்கம். அதாவது சிறந்த பீல்டருக்கு விருது வழங்கப்படும். அந்த வகையில் சிறந்த பீல்டருக்கான விருதை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். இந்த விருதை இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு கொடுத்தார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.