மெக்சிகோ நாட்டின் புதிய அதிபராக முதல் முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் பெண் மோயர் ஒருவர் பொது இடத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் சான்சஸ் என்பவர் வெற்றி  பெற்றார். இவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மர்ம நபர்கள் சிலர் கடத்திய நிலையில் அதன் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சான்சஸை  மர்ம நபர்கள் சிலர் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ‌ பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.