இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் 3-வதாக பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், வரலாற்று சிறப்புமிக்க 3-வது வெற்றியைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

மோடியின் தலைமையில் மிகப்பெரிய ஜனநாயகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையும். இந்தியா மற்றும் மொரிஷியஸ் கூட்டுறவு என்றும் நிலைத்திருக்கும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோன்று அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தும் முடித்த இந்திய அரசுக்கும், வாக்காளர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதேசமயம் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள் பற்றி நாங்கள் எதுவும் பேசப் போவதில்லை என்று கூறிய அவர் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான கூட்டுறவு என்றும் நல்ல முறையில் தொடரும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, நேபாள நாட்டின் பிரதமர், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.