ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா மற்றும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரக்ஷித் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் அப்துல் ரக்ஷித் வெற்றி பெற்ற நிலையில் ஓமர் அப்துல்லா தன்னுடைய தோல்வியை ஏற்பதாக அறிவித்துள்ளார். அதோடு வெற்றிபெற்ற அப்துல் ரக்ஷித்துக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இன்ஜினியர் ரக்ஷித் என்று அழைக்கப்படும் அப்துல் ரக்ஷித் UAPA சட்டத்தில் கைதாகி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார். மேலும் சிறையில் இருக்கும் அப்துல் ரக்ஷித் பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.