
வாரத்தில் 42 மணி நேரம் மருத்துவ வேலை செய்தால் சம்பளம் 1.5 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறதாம் ஒரு நாட்டில். மேற்கு கடற்கரையில் உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா என்ற இரண்டு தீவுகள் உள்ளது. தற்போது அங்கே வெறும் 40 மக்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள் . இந்த நிலையில் கோடைகாலத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அந்த இடத்தில் வேலைக்கு ஆள் சேர்க்கும் திட்டத்தில் வெஸ்டர்ன் ஐல்ஸ் நடத்திய ஆள் சேர்க்கை குழுவானது மருத்துவத்திற்கு வருடத்திற்கு 1.5 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்ற உதவித்தொகையாக 8 லட்சமும், பணிக்கொடையாக 1.3 லட்சமும், அலவேன்ஸ் 11 லட்சமும் தனித்தனியாக வழங்கப்படும். அதன் படி மொத்தமாக ஒரு மருத்துவருக்கு வருடத்திற்கு 1.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இந்த சலுகைகளை பெற வாரத்திற்கு 42 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என்று கூறப்படுகிறது. பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.