பொதுவாக தண்ணீரை வீணடிக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது ஒரு கேன் தண்ணீருக்காக விடிய விடிய மக்கள் காத்திருக்கும் அவல நிலை மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்து பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் வடக்கு கிவு மாகாணத்தில் கோமா என்ற ஒரு நகரம் அமைந்துள்ளது.

இந்த நகருக்கு போரின் காரணமாக பல மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் தண்ணீருக்கு மிகப்பெரிய அளவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கேன் தண்ணீருக்காக மக்கள் விடிய விடிய காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக செஞ்சிலுவை சங்கம் சார்பில் அங்கு தற்போது குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த சம்பவம் மிகவும் வேதனையை தருவதாக அமைந்துள்ளது.