நடிகை அஞ்சலி கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் ப்ரீ ரிலீஸ் விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டார். அதில் நடிகர் பாலகிருஷ்ணாவும் கலந்து கொண்ட நிலையில் அஞ்சலி மேடையில் இருந்த போது அவரை பாலகிருஷ்ணா திடீரென தள்ளி விட்டதால் நடிகை அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பலரும் பாலகிருஷ்ணாவை திட்டி தீர்த்து வந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு நடுவே பாலகிருஷ்ணா பற்றி அஞ்சலி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், கேங்ஸ் ஆப் கோதாவரி பட விழாவிற்கு வந்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி கூற விரும்புகின்றேன். அவருக்கும் எனக்கும் ஒரு நல்ல mutual respect உள்ளது. நீண்ட காலமாக நாங்கள் நட்புடன் இருக்கிறோம். அவருடன் மீண்டும் மேடையில் இருந்தது அற்புதமாக இருந்தது என அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
I want to thank Balakrishna Garu for gracing the Gangs of Godavari pre-release event with his presence.
I would like to express that Balakrishna garu and I have always maintained mutual respect for eachother and We share a great friendship from a long time. It was wonderful to… pic.twitter.com/mMOOqGcch2
— Anjali (@yoursanjali) May 30, 2024
