
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு அனைத்துமே மிக எளிதாகி விட்டது. பெரிய வேலைகளை கூட இருந்த இடத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக எளிதில் முடித்து விடுகிறோம். அதன்படி 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் whatsapp மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
500 யூனிட் பயன்படுத்தும் பயனர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு 94987 94987 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ் அப் செய்தி அனுப்பப்படும். அதில் view, pay bill லிங்க் இருக்கும். View பக்கத்தில் மின் பயன்பாடு மற்றும் கட்டண விவரம் இருக்கும். Pay bill அழுத்தினால் யுபிஐ மூலமாக கட்டணம் செலுத்தி விடலாம்.