தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் விமர்சனங்களும் எழுந்தது. அதாவது சங்கீதா பணத்திற்கு ஆசைப்பட்டதன் ரெடின் கிங்சிலியை திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதோடு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை சங்கீதா தன் மீது வந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அந்தப் பெண் குழந்தை என்னுடைய சகோதரன் குழந்தை. ஆனால் இதுவரை அதை புரிந்து கொள்ளாமல் என்னுடைய குழந்தை என்று பேசுகிறார்கள். நானும் அப்படியே இருக்கட்டும் என்று அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். நான் பணத்திற்கு ஆசைப்பட்டு ரெடிங் கிங்சிலியை திருமணம் செய்ததாக கூறுகிறார்கள். நான் ஒன்றும் இல்லாமல் வந்தவள் கிடையாது. இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அவருடைய குணம் எனக்கு பிடித்ததால் தான் திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.
