சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது பாட்டில்கள் மற்றும் நொறுக்கு தீனிகள் போன்றவைகள் கிடந்தது.

அந்த இளம் பெண் உட்பட அங்கிருந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த பொது மக்களை முகம் சுழிக்க வைத்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்‌. அந்த விசாரணையின் போது டாஸ்மாக் கடையில் மது வாங்கி விட்டு வந்து அங்கு உட்கார்ந்து அமர்ந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் போலீசார் இளம்பெண் மற்றும் வாலிபர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.