இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தன்னுடைய ஓய்வு குறித்து தற்போது பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு விளையாட்டு வீரராக அனைவருக்கும் அவர்களின் பயணத்தில் முடிவு என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். என்னால் இறுதிவரை விளையாடிக்கொண்டே இருக்க முடியாது. நான் எந்த வருத்தமும் இன்றி விடை பெற வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே என்னால் முடிந்த வரை என்னுடைய முழு பலத்தையும் நான் கிரிக்கெட்டில் காட்டுவேன். ஒருமுறை ஓய்வை அறிவித்து விட்டால் அதன் பின் உள்ளே வர முடியாது. நான் ஓய்வை அறிவித்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு என்னை யாராலும் காண முடியாது என்று கூறியுள்ளார்.

தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அடுத்ததாக ஜூன் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட இருக்கிறார். அவருக்கு தற்போது 35 வயது ஆவதால் அவருடைய ஓய்வு பற்றிய ‌ விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது அவரே அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். மேலும் விராட் கோலி ஓய்வு பெற்ற பிறகு என்னை யாராலும் பார்க்க முடியாது என்று கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.