கல்லூரிகளில் சேர்வதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும் நிலையில் சமீபத்தில் வெளியான செமஸ்டர் தேர்வு முடிவில் 56 கல்லூரிகளில் 20% மாணவர்களே தேர்ச்சி பெற்றனர். போதிய வசதிகள் கல்லூரிகளில் இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.