T20 உலக கோப்பை இந்திய அணிக்கு ரிங்கு சிங், கே.எல்.ராகுல் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மாவும், அகர்கரும் விளக்கம் அளித்துள்ளனர். ரிங்கு சிங் தவறு இழைக்கவில்லை என்றும், மேலும் ஒரு பவுலர் தேவை என்பதாலேயே அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ராகுலை விட பண்ட், சாம்சன் சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால் இரண்டு பேரும் தேர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டனர்.