ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள் தங்கள் வீரர்கள் குறித்த அறிவிப்பை மே 1ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்தது. அதன்படி ஏற்கனவே பல நாடுகள் தங்கள் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர்கள் குறித்து அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அதன்படி மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி இந்த அணியில் ஆடம் ஜம்பா, டேவிட் வார்னர், மேத்யூ வேட், மார்க்க ஸ்டோயினிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஜோஸ் இங்கிலிஷ், டிராவிஸ் ஹெட், ஜோஸ் ஹேசில்வுட், கேமரூன் கிரீன், நாதன் எல்லிஸ், டிம் டேவிட், பேட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்டன் அகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.