பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்று 4ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து, ‘உழவர்களை வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்’ என்ற தலைப்பின் கீழ் இதனை வாசித்து வருகிறார். சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில்  இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 208.20 கோடி நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.