முன்னாள் மத்திய அமைச்சரும் மதுரை மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகருமான மு.க அழகிரியின் மகன் துறை தயாநிதி உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூளை பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கான அறுவை சிகிச்சை நேற்று நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சையில் இருக்கும் துறை தயாநிதியைக் காண முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது