சென்னையில் ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது. எனவே அன்றாட தேவையை விட அதிக பால் வாங்கி மக்கள் இருப்பு வைக்க வேண்டாம் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நேற்று முதல் ஆவின் பால் சீராக கிடைக்காமல் மக்கள் அவதி அடைந்த நிலையில் அமைச்சர் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அம்பத்தூர் பால்பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால் அங்கு காலதாமதம் ஏற்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.