
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்களுக்காக தினமும் வேலை செய்யக்கூடிய…. உழைக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற தலைவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் எதுல ஊழல் செய்யாம விட்டாங்க ? அண்ணன் முருகன் அவர்கள் சொன்னார்கள்…
12லட்சம் கோடி… 1 லட்சத்தி 76ஆயிரம் கோடி 2G ஊழல், நிலக்கரி ஊழல், காமன் வெல்த் ஊழல், டாய்லெட் பேப்பர் ஊழல் எல்லாத்துலையும் ஊழல்.. 12லட்சம் கோடி… நம்முடைய மத்திய அமைச்சர்கள் 68 பேர் இருக்காங்க. அதுல யாராவது ஒருவர் குண்டு ஊசியை திருடிவிட்டார் என்ற குற்றசாட்டு வைக்க முடியுமா ? அப்படிப்பட்ட நேர்மையான ஆட்சியை பாரத பிரதமர் மட்டுமல்ல, அவருக்கு இணையாக வேலை செய்து கொண்டிருக்க கூடிய நம்முடைய மந்திரி பெருமக்களும் கூட நமக்காக அப்படிப்பட்ட ஆட்சியை கொடுத்து கொண்டிருக்கிறார்.
மேட்டுப்பாளையத்துல இன்னொரு விஷயத்தை பாக்கலாம். சத்துணவுக்கு கொடுக்கப்பட வேண்டிய முட்டை ஒரு தனியார் கூடோன்ல இருக்கு. பியூஸ் கோயல் அவர்கள் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மினிஸ்டர். இதற்கு முன்பு இன்னோரு இடத்துல தமிழகத்துல கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்துல ஒரு பள்ளியிலே கொடுக்கப்படவேண்டிய சத்துணவு முட்டை, கடையில விற்றுகிட்டு இருக்காங்க என தெரிவித்தார்.