
கார் கண்ணாடியில் சிக்கிய குழந்தை ஒன்றை நபர் ஒருவர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக காரில் பயணம் செய்யும் பொழுது குழந்தைகளுடைய பாதுகாப்பு ரொம்ப அவசியமானது. பல தருணங்களில் பெற்றோர்கள் அலட்சியத்தால் குழந்தைகளின் உயிரே பறிபோகும் அபாயமும் ஏற்படுகிறது. அந்த வகையில் கார் ஒன்றில் குடும்பத்தினர் குழந்தையோடு அமர்ந்திருக்கும் பொழுது கண்ணாடியில் குழந்தை ஒன்று மாட்டிக் கொள்கிறது.
எதிர்பாராத விதமாக கண்ணாடி மேலே உயரும்போது குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக இருக்கிறது. அந்த தருணத்தில் மின்னல் வேகத்தில் வந்த நபர் ஒருவர் கண்ணாடியை உடைத்து குழந்தையை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திடீரென கார் கண்ணாடி உயர குழந்தையின் தலைச்சிக்கிக் கொண்டது முன்பின் தெரியாத இளைஞர் ஒருவர் செய்த உதவி
💜🙏💜🙏💜🙏💜🙏💜 pic.twitter.com/cgPQUfyKfY— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) October 14, 2023