இணையத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் விபரீதமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள். பாடல்கள் மற்றும் ட்ரெண்டான பாடல்களுக்கு நடனமாடி ரீல்சை பதிவேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் புடவை அணிந்து கொண்டு கேஸ் சிலிண்டரை தலையில் கரகம் போல வைத்து நடனம் ஆடுகிறார். இந்த வீடியோவை பார்த்து இணைவாசிகள் மிரண்டு போயுள்ளார்கள். அவர் தலையில் உள்ள சிலிண்டர் கீழே விழுந்தால் கண்டிப்பாக மோசமான விளைவுகள் எதாவது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் விடாமல் சிலிண்டர் தலையில் இருக்கும் பொழுது பாத்திரம் ஒன்றின் மீது ஏறி காலை வைத்து ஸ்டண்ட் செய்து சாகசம்  செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த இணையவாசிகள் இதுபோன்று வேறு யாரும் முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by கரகம் துர்கா (@karagam_durga)