
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றும். இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை வெற்றிகரமாக நிறைவேற்றி தற்போது ஏழாவது சீசனில் நுழைகிறது. அதோடு இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பிரபலங்கள் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வழக்கத்திற்கு மாறாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி விடுகிறார்கள்.
மீடியா பயணத்தை இதிலிருந்து தொடங்குவோம் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு இது ஒரு களமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் மொத்தம் இரண்டு வீடுகள் இருக்கும் என்று ஆரம்பத்திலேயே கமல் அறிவித்துவிட்டார். அதனால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஜிபி முத்து கடிதம் படிக்கும் வீடியோ போன்ற வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு பிக் பாஸ் வீடு இருந்தால் கமல் சனிக்கிழமை ஒரு வீட்டில் பேசிவிட்டு ஞாயிற்றுக்கிழமை இன்னொரு வீட்டில் பேசுவாரா என்று கேட்டிருக்கிறார். மேலும் இந்த சீசனில் 2 டைட்டில் வின்னர் இருப்பார்களா என்று காமெடியாக ஜிபி முத்து கேட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram