உலக விலங்குகள் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் நான்காம் தேதி உலகம் முழுவதும் விலங்குகளின் நலன் தரத்தை மேம்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. உலக விலங்கு தினம் கொண்டாட்டம் என்பது விலங்கு நல இயக்கமாகும். உலக நாடுகள் அனைத்து விலங்குகளுக்கும் சிறந்த இடமாக மாற்ற உலக நாடுகளை இது தூண்டுகின்றது. இந்த நாள் விலங்கு பிரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் எல்லா வழிகளிலும் விலங்குகளின் நலனுக்காக பங்களிப்பதற்கு இது வாய்ப்பளிக்கிறது.

உள்நாட்டு மற்றும் காட்டு விலங்குகளில் உள்ள விலங்குகளின் அவல நிலையை நிவர்த்தி செய்வதற்கு இன்றியமையாத பணிகள் செய்ய வேண்டும் என்பதை இந்த நாள் நினைவு கூறுகிறது. விலங்குகளின் உரிமைகளுக்காக பாடுபடும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் விலங்குகளின் பாசம் மற்றும் பாதுகாப்பு என ஊக்குவிக்கும் இந்த நாள் விலங்கு காதலர்கள் தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்த நாள் முதன் முதலில் 1925 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி விலங்கு பாதுகாப்பு ஆர்வலர் என்ற ஹென்ரிச் சிம்மர்மேன் என்பவரால் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தை தற்போது கொண்டாடுவது இங்கிலாந்தை தளமாக கொண்ட விலங்கு நல தொண்டு நிறுவனமான நேச்சர் வாட்ச் அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை 2003 ஆம் ஆண்டு முதல் உலக விலங்கு தின இணையதளத்தை அறிமுகம் செய்தது. இதில் உலக விலங்குகள் தினத்தன்று அதைச் சுற்றிலும் நடைபெறும் உலகளாவிய உலக விலங்குகள் தின நிகழ்வுகளின் பட்டியல்கள் உள்ளது.

சுற்றுச்சூழலின் புரட்சியாளர் பிரான்சிஸ் அசிசியின் பிறந்த நாளின் நினைவாக உலக விலங்குகள் நல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பேச முடியாத இந்த உயிரினங்கள் மீதான மக்களின் விளைவுகள் மற்றும் அவர்களின் நடத்தைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த நாள் கவனம் செலுத்துகின்றது. விலங்குகளுக்கு எதிரான கொடுமை பற்றிய விழிப்புணர்வை பரப்புகின்றது. அதாவது கற்களை வீசுவது முதல் அடித்தல் மற்றும் தடியடி என தவறான விஷயங்களுக்கு அவற்றை பயன்படுத்துதல் வரை அனைத்தையும் இந்த நாள் உள்ளடக்கியது.