நடிகர் பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்த கன்னட youtube சேனல் உரிமையாளர் விக்ரமன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரகாஷ்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூரு அசோக் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சனாதன தர்மத்திற்கு எதிரான தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக விக்ரமன் தனது youtube சேனலில் விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சி தன்னையும் அவரது குடும்பத்தினரையும் மோசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்து வருவதாக பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.