எலிகளை பிடிக்க பல லட்சங்கள் செலவானதாக ரயில்வே அதிகாரிகள் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டெல்லி, அம்பாலா, மொராதாபாத், லக்னோ மற்றும் ஃபெரோஸ்பூர் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளைக் கொண்ட வடக்கு ரயில்வேயில் எலிகளைப் பிடிப்பதற்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு எனக்கேட்டு மனு செய்திருந்தார்.

இதனையடுத்து இந்த மனுவிற்கு, லக்னோ வடக்கு பிரிவில் 2020-2022க்குள் 168 எலிகளைப் பிடிக்க சுமார் ரூ.69.5 லட்சம் செலவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு எலி பிடிக்க ரூ.41 ஆயிரம் வரை செலவு செய்ததாக கூறியுள்ளனர்.  அதிகாரிகள் இவ்வாறு பதில் அளித்து ஷாக் கொடுத்துள்ளனர்.