
பொதுவாக குழந்தைகள் இருக்கும் இடத்தில் இருந்தாலே மகிழ்ச்சியும் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில் தற்போது வெளியான வீடியோவில் தந்தை ஒருவர் தண்ணீர் பழம் ஒன்றில் இரண்டு ஸ்ட்ரா வைத்து அதனை குடிப்பது போன்று ஆக்ஷன் செய்துள்ளார்.
இதை பார்த்த குழந்தையும் மற்றொரு குழாயில் உரிந்து குடிப்பதற்கு தயாராகியுள்ளது. ஆனால் தந்தை தனது குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்கு கஷ்டப்பட்டிருப்பார் போல. அதனால் குழந்தையின் உறிஞ்சு குழாய்க்கு அடிப்பகுதியை மருந்து பாட்டிலுடன் இணைத்துள்ளார். குழந்தையும் அதை ஜுஸ் என்று நினைத்து உறிந்து குடித்தது மருந்து என்பது அதன்பின் தெரியவந்துள்ளது. இதை பார்த்த இணையவாசிகள் நிச்சயம் உலகத்துல இப்படியொரு தந்தையை பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram