கேரள மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு பாடங்களை சேர்ப்பதற்கு கேரள அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான பாடப் புத்தகங்களை திறமையான நிபுணர்களை வைத்து விரைவில் தொடங்க உள்ளதாக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இன்று தெரிவித்துள்ளது. மேலும் கேரளா மாநிலத்தில் அடுத்து வரும் கல்வி ஆண்டில் அனைத்து வகுப்பு பாடங்களிலும் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது