
ஹாலிவுட் நட்சத்திர இயக்குனரும் ஆஸ்கர் விருது பெற்றவருமான வில்லியம் ஃப்ரீட்கின் காலமானார். இவருக்கு வயது 81. இவர் திகில் மற்றும் திரில்லர் திரைப்படங்களை தயாரிப்பதில் வல்லவர். தி எக்ஸார்சிஸ்ட் என்ற கிளாசிக் ஹாலிவுட் ஹாரர் திரைப்படத்தின் இயக்குநர் வில்லியம் ஃப்ரைட்கின் இன்று காலமானார். சிறந்த இயக்குநர் உட்பட 5 அகாடமி விருதுகளை வென்ற இவருக்கு த்ரில்லர் தி ஃப்ரெஞ்ச் கனெக்சன் என்ற படம் ஆஸ்கர் விருதைப் பெற்று தந்தது. மேலும் 1973 ஆம் ஆண்டு உலகளவில் பேய் படங்களுக்கென தனி அடையாளத்தை பெற்றுத்தந்த படம் ‘தி எக்ஸார்சிஸ்ட்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.