
மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு ஃபார்ஹான மாகாணத்தின் பள்ளி ஒன்றின் வேதியல் ஆய்வகத்தில் அம்மோனியா வாயு இருந்த தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. டாக்கி எஸ் எல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கான வேதியியல் செயல்முறை போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த சமயத்தில்தான் அமோனியா வாயு தொட்டி வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த வாயுவை சுவாசித்த ஒன்பது மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் என பத்து பேர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை எடுக்க தொடங்கி சிறிது நேரத்திலேயே 10 பேரின் உடல் நிலையிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று கூறப்படுகின்றது.