இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் வசதியாக யெஸ் வங்கியின் சார்பாக ரூபே கிரெடிட் கார்ட் மூலம் யுபிஐ கட்டணம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் இனி தங்கள் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டை போன் பே, கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளோடு இணைத்துக்கொள்ளலாம்.

அவ்வாறு இணைக்கப்பட்டவுடன் வாடிக்கையாளர்கள் கூடுதல் பாதுகாப்போடு கிரெடிட் கார்டு அடிப்படையிலான பண பரிவர்த்தனையை செய்ய முடியும். இந்த வசதி மூலமாக வாடிக்கையாளர்கள் கிரெடிட் ஃப்ரீ கால அம்சத்தை பெற முடியும். இந்த ரூபே கார்டு இல்லாத யெஸ் பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் விர்ச்சுவல் யெஸ் பேங்க் ரூபே கிரெடிட் கார்டை வாங்கி அதை தங்களுடைய UPI செயலியொடு இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.