சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஏதேனும் காணொளி வெளியாகி வைரலாவது வழக்கம். அவற்றில் சில நகைச்சுவை கலந்ததாகவும் இருக்கும் சில சிந்திக்கும் படியும் இருக்கும் சில தண்டனையை வாங்கி கொடுக்கும் காணொளியாகவும் இருக்கும். அந்த வகையில் தற்போது ஒரு இளைஞரை அம்ரோஹா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் ஒன்றில்  தனது ராயல் என்ஃபீல்டு புல்லட்டிற்கு பெட்ரோல் நிரப்புகிறார்.

அதன் பிறகு அவர் பெட்ரோல் கொண்டு அவரது பைக் மொத்தத்தையும் குளிப்பாட்டுவது போன்று காணொளி பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  ஆபத்தை விளைவிக்கும் வகையில் காணொளி பதிவு செய்து வெளியிட்ட அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த காணொளி மட்டுமல்லாது தனது நண்பரை பைக்கில் முன் டயர் மீது அமர வைத்து இவர் பைக் ஓட்டி செல்லும் காணொளியும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.