அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகை குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட்ட வரும் நிலையில் கடந்த  2009 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மறு நிர்ணயம் செய்யப்பட்ட சமயத்தில் தணிக்கை துறை நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகையை பிடித்தம் செய்வது தொடர்பாக ஓய்வூதிய ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. கூடுதல் ஓய்வூதியம் பிடித்தம் செய்யப்பட கருவுலக கணக்கு துறை ஆணையர் விஜயந்திர பாண்டியர் அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதன் பிறகு மாத ஓய்வூதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓய்வூதியம் கூடுதலாக வழங்கப்பட்டதை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். நடவடிக்கைகள் எடுக்காமல் அரசுக்கு கூடுதலாக இழப்பு ஏற்படுத்தும் கருவூல அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை இதற்கு பொறுப்பு தாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.