தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்தான் பிசி ஸ்ரீராம். இவர் தமிழில் வா இந்த பக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மௌன ராகம், நாயகன் மற்றும் தேவர் மகன் என அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதாவது மீரா, குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீ ராம் மறைந்த தன்னுடைய மகளின் புகைப்படத்தை முதல் முறையாக பதிவு செய்துள்ளார். அவரின் உருக்கமான பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.