கடந்த 2018 ஆம் வருடம் லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற இந்தி ஆந்தாலஜி சீரிஸ் நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் வெளியானது. இந்த சீரியஸானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகமானது நேற்று முன்தினம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. கஜோல் ,நீனா குப்தா, தில்லோடமா ஷோம், விஜய் வர்மா உள்ளிட்ட பலரும் இந்த சீரிஸ் நடித்துள்ளனர். இந்நிலையில்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வெப் சீரிஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள மிருணாள் தாக்கூர், ‘ஒவ்வொரு வீட்டிலும் வளரும் குழந்தைகளுக்கு காமம் மற்றும் காதல் பற்றி முதிர்ச்சியான உரையாடல்கள் இருக்க வேண்டும்.

பெரியவர்களிடம் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவது அவசியம். அப்போதுதான் அவர்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். இல்லையெனில், தவறான தகவல் தெரிந்து தவறான பாதையில் செல்லும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.