உழவன் எனும் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அந்த படத்தை அடுத்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.  தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்புரி ஆகிய பல மொழிப் படங்களில் நடித்திருக்கும் ரம்பா கடைசியாக பெண் சிங்கம் எனும் படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2010-ம் வருடம் ரம்பா கனடா தொழில் அதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். இதனிடையே ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.