தமிழகத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர், மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணம் இல்லாத 10581 என்ற தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மதுவிலக்கு உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் whatsapp எண்களை அறிவித்து அதன் மூலம் புகார்களை பெற வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் தடுப்பு தொடர்பாக ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.