சாமானிய மக்கள் உடனும் தொடர்பில் இருப்பதற்கான சிறந்த வழித்தடமாக மன் கி பாத் நிகழ்ச்சி இருக்கிறது என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் கூறினார். மன் கி பாத் 100வது நிகழ்ச்சியில் பேசிய அவர், “இதில் ஒவ்வொரு முறை பேசும்போதும் நாட்டு மக்களிடம் இருந்து விலகாமல் அவர்கள் உடன் இணைந்திருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இயற்கை வளங்களை சுத்தமாக வைத்திருப்பது வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். 100வது அத்தியாயத்தை எட்ட உதவிய நாட்டு மக்களுக்கு தனது நன்றிகள். இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள், புனிதத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி நான் என்ற எண்ணத்தில் இருந்து நாம் என்ற எண்ணத்தை கொடுத்துள்ளது” என பூரிப்புடன் பேசினார்.