90s காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரஷாந்த். விஜய், அஜித் இரண்டு பேரையும் விட முன்னணியில் இருந்தார். எனினும் திடீரென்று அவர் மார்க்கெட்டை இழந்து சில வருடங்கள் தமிழ் திரையுலகில் படங்கள் நடிக்காமல் இருக்கிறார். மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இப்போது அந்தகன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரஷாந்த். இந்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. பிரஷாந்த் தன் திரை வாழ்க்கையில் பல்வேறு சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்து உள்ளார். சில சூப்பர் ஹிட் படங்களையும் தவறவிட்டு உள்ளார்.

அவ்வாறு அவர் தவறவிட்ட படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இந்த படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தவர் பிரஷாந்த். இருப்பினும் அவரால் இந்த ரோலில் நடிக்க முடியாமல் போய் விட்டது.

அதன்பின் இந்த வாய்ப்பு தளபதியை தேடி சென்றிருக்கிறது. இருந்தாலும் விஜய்யும் இந்த படத்தில் நடிக்க முடியாமல், அடுத்து இக்கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அஜித்துக்கு சென்றிருக்கிறது. தனக்கு கிடைத்த வாய்ப்பு உரிய நேரத்தில் பயன்படுத்தி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.